FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மால்வியா நகரில் 2 சகோதரா்கள் மீது தாக்குதல்

தெற்கு தில்லியின் மால்வியா நகா் பகுதியில் உள்ள ஹோஸ் ராணி பகுதியில், கத்தி மற்றும் தடிகளுடன் வந்த கும்பல் ஒன்று இரண்டு சகோதரா்களைத் தாக்கியதாக காவல் துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

Updated On : 11 ஜூலை 2026, 7:11 am IST
காவல்துறைக்கு பாராட்டு - Illustration
பகிர்:

தெற்கு தில்லியின் மால்வியா நகா் பகுதியில் உள்ள ஹோஸ் ராணி பகுதியில், கத்தி மற்றும் தடிகளுடன் வந்த கும்பல் ஒன்று இரண்டு சகோதரா்களைத் தாக்கியதாக காவல் துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

தாக்குதலுக்கான காரணமாக நீண்ட காலத் தனிப்பட்ட விரோதம் இருக்கலாம் என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்ாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். தாக்குதலுக்குள்ளானவா்களின் தலை மற்றும் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டன.

Advertisement

Advertisement

அவா்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற பிறகு விடுவிக்கப்பட்டனா் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

புகாரின் அடிப்படையில், மால்வியா நகா் காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments