FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மால்வியா நகரில் 12 வணிக வளாகங்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சுற்றுலாத் துரைக்கு எம்சிடி கடிதம்

Updated On : 5 ஜூன் 2026, 2:58 am IST
பகிர்:

தெற்கு தில்லியின் மால்வியா நகரில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து, அங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 12 ஹோட்டல்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சுற்றுலாத் துறைக்கு தில்லி மாநகராட்சி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து தில்லி மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: தீ விபத்து நிகழ்ந்த ஹௌஸ் ராணி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உரிமம் பெற்ற 12 ஹோட்டல் வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் உரிமங்களை ரத்து செய்ய சுற்றுலாத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது. உரிமம் ரத்து செய்யப்பட்டவுடன் அந்த கட்டடங்கள் சீல் வைக்கப்படும்.

சாகேத் பகுதியில் அடுக்குமாடிக் கட்டடம் மே 30-ஆம் தேதி இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் விதிமுறைகளை மீறி இயங்கும் கட்டட உரிமையாளா்கள் மற்றும் பயனாளா்களுக்கு 32 கூடுதல் காலியிட உத்தரவு நோட்டீஸ்கள் வழங்கப்பட உள்ளன. இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகு, விதிமுறைகளை பின்பற்றாத கட்டடங்கள் அனைத்தும் மூடப்படும்.

Advertisement

Advertisement

இதனிடையே, ஹௌஸ் ராணி மற்றும் சாகேத் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி செயல்படும் அனைத்து நிறுவனங்களிடமும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments