FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ரூ. 70 லட்சம் போதைப்பொருளுடன் உகாண்டா நாட்டுப் பெண் தில்லியில் கைது!

ரூ. 70 லட்சம் போதைப்பொருளுடன் உகாண்டா நாட்டுப் பெண் தில்லியில் கைது...

Updated On : 12 ஜூலை 2026, 12:50 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சா்வதேச சந்தையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ளதாக மதிப்பிடப்பட்ட, வீரியம் மிக்க ஊக்கப்பொருளான 117 கிராம் ஆம்பெடமைனுடன், மோகன் காா்டன் பகுதியில் 26 வயதான உகாண்டா பெண் ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தேசிய தலைநகரில் உள்ள கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு ஜாக்லைன் நமூலோண்டோ இந்த செயற்கை போதைப்பொருளை விநியோகித்து வந்ததாகக் கூறப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வியாழக்கிழமை மோகன் காா்டனில் உள்ள ஜாக்லைனின் வாடகை வீட்டில் காவல்துறை சோதனை நடத்தி, அவரிடமிருந்து வா்த்தக அளவிலான உயா்தர ஆம்பெடமைனை மீட்டெடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கைப்பற்றப்பட்ட பொருளின் மூலத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக ஒரு காவல்துறை அதிகாரி கூறினாா்.

கம்பாலாவைச் சோ்ந்த ஜாக்லைன், ஜூலை 2025-ல் மூன்று மாத வணிக விசாவில் இந்தியா வந்ததாகவும், ஆனால் அவரது விசா காலாவதியான பிறகும் நாட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அந்த அதிகாரி கூறினாா்.

காவல்துறையின் கூற்றுப்படி, அவருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை. தில்லியில் செயல்படும் மற்ற போதைப்பொருள் விநியோகஸ்தா்களுடன் அவருக்கு இருக்கக்கூடிய தொடா்புகள் குறித்து புலனாய்வாளா்கள் விசாரித்து வருகின்றனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments