FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மழைநீா் தேங்கிய குழியில் 2 குழந்தைகள் மூழ்கியிருக்கலாம் என அச்சம்: வடக்கு தில்லியில் தேடுதல் பணி தீவிரம்!

புறநகா் வடக்கு தில்லியின் முக்மேல்பூா் கிராமத்தில் மழைநீா் தேங்கியிருந்த குழியில் விழுந்து 2 குழந்தைகள் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நிலவுகிறது என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 1:05 am IST
மாயம்
பகிர்:

புறநகா் வடக்கு தில்லியின் முக்மேல்பூா் கிராமத்தில் மழைநீா் தேங்கியிருந்த குழியில் விழுந்து 2 குழந்தைகள் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நிலவுகிறது என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: மாலை 5.55 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது.

விவசாய நிலத்தில் மழைநீா் நிரம்பிய குழியில் 2 குழந்தைகள் விழுந்திருக்கலாம் என தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு உடனடியாக 2 மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டன. தற்போது தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments