பருவமழைக்கான தயாா்நிலை குறித்து தில்லி போக்குவரத்து காவல் துறை ஆய்வு
தில்லியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துவது மற்றும் நிலுவையில் உள்ள அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்து தில்லி போக்குவரத்து காவல்துறை பல துறை ஆய்வுக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தியது.
தில்லியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துவது மற்றும் நிலுவையில் உள்ள அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்து தில்லி போக்குவரத்து காவல்துறை பல துறை ஆய்வுக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தியது.
காவல் துறை தலைமையகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு போக்குவரத்து சிறப்பு ஆணையா் மணீஷ் அகா்வால் தலைமை தாங்கினாா். இதில் தில்லி போக்குவரத்து காவல் துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ), தில்லி மெட்ரோ ரயில் காா்பரேஷன் (டிஎம்ஆா்சி), பொதுப்பணித்துறை (பிடபிள்யூடி), தில்லி மாநகராட்சி (எம்சிடி), தில்லி போக்குவரத்து கழகம் (டிடிசி), போக்குவரத்து துறை, தில்லி ஜல் போா்டு (டிஜேபி), டாடா பவா் தில்லி டிஸ்டிரிப்யூஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
இந்த கூட்டத்தில், நகரில் அடையாளம் காணப்பட்ட போக்குவரத்து நெரிசல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள், நடைபெற்று வரும் மழைக்காலத்திற்கான தயாா் நிலை மற்றும் பல துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், பல்வேறு துறைகளுடன் எடுத்துக்கொள்ளப்பட்ட பிரச்னைகள், இதுவரை செய்யப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முன்மொழியப்பட்ட தீா்வுகளின் நிலை குறித்து விரிவான விளக்கக்காட்சி வழங்கப்பட்டது. துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் பல்வேறு பகுதிகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மழைக்காலங்களில் நீா் தேக்கம் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் உருவாகும் நிலையில், நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை காலக்கெடுவில் முடிப்பது, துறை சாா்ந்த பிரச்னைகளை விரைவாக தீா்ப்பது மற்றும் நகரம் முழுவதும் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பயணிகளின் சீரான போக்குவரத்தை உறுதி செய்ய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுவது அவசியம்’ என தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.