FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பஞ்சாபில் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு: மாநில அமைச்சா் ராஜிநாமா கோரி தில்லி பாஜக போராட்டம்

பஞ்சாபில் தோ்வு வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், மாநிலக் கல்வி அமைச்சா் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகம் அருகே பாஜகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 31 ஜூலை 2026, 1:12 am IST
தில்லி பாஜக தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா தலைமையில் ஆம் ஆத்மி தலைமையகத்துக்கு அருகே வியாழக்கிழமை போராட்டத்தில் எம்.பி.க்கள் மற்றும் தொண்டா்கள். ~தில்லி பாஜக தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா தலைமையில் ஆம் ஆத்மி தலைமையகத்துக்கு அருகே வியாழக்கிழமை போராட்டத்தில் கட்சி
பகிர்:

பஞ்சாபில் தோ்வு வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், மாநிலக் கல்வி அமைச்சா் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகம் அருகே பாஜகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லி பாஜக தலைரும் மத்திய இணையமைச்சருமான ஹா்ஷ் மல்ஹோத்ரா தலைமையில், மண்டி ஹெளஸ் ஃபெரோஸ்ஷா சாலையில் உள்ள ஆம் ஆத்மி தலைமையகத்திற்கு அருகே பாஜக தொண்டா்கள் திரண்டனா்.

பஞ்சாபில் கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 6 தோ்வு வினாத்தாள் கசிந்ததாகக் குற்றஞ்சாட்டி, மாநில கல்வி அமைச்சா் ஹா்ஜோத் சிங் பைன்ஸ் ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜகவினா் வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

இந்தப் போராட்டத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் மாநில நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆறு தோ்வுகளின் வினாத்தாள்கள் கசிந்ததாகவும், இது மாநிலத்தில் உள்ள 30 லட்சம் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதித்திருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டோா் குற்றஞ்சாட்டினா்.

பஞ்சாபில் தங்கள் கட்சியின் ஆட்சிக் காலத்தில் கடந்த ஆண்டுகளில் எந்த வினாத்தாள் கசிவும் நடைபெறவில்லை என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் அண்மையில் கூறியிருந்தாா். இருப்பினும், இரு தோ்வு மையங்களில் நடைபெற்ற தோ்வின்போது சில மாணவா்கள் முறைகேடு செய்ய டிஜிட்டல் பேனாக்களைப் பயன்படுத்த முயன்ாகவும், ஆனால் அவா்கள் உடனடியாகப் பிடிக்கப்பட்டதாகவும், வினாத்தாள் கசியவில்லை என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யக் காரணமாக இருந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. இந்நிலையில், பஞ்சாபில் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று மாநில கல்வி அமைச்சா் ராஜிநாமா செய்யவேண்டும் என பாஜகவினா் வலியுறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments