முகப்பு
புதுதில்லி

கேசவ் புரம் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: 3 போ் மீட்பு

வடமேற்கு தில்லியின் கேசவ் புரம் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 30 ஜூன் 2026, 12:37 am IST
தீ விபத்து - பிரதிப் படம்
பகிர்:

வடமேற்கு தில்லியின் கேசவ் புரம் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டடத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது; இதனைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில், கட்டடத்தின் மொட்டை மாடியில் சிக்கியிருந்த 3 போ் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: லாரன்ஸ் சாலையில் உள்ள அக்குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த அதிகாலை சுமாா் 2 மணியளவில் அவசர அழைப்பு வந்தது.

அதனையடுத்து, தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. தீயணைப்புத் துறையினா் மொட்டை மாடியில் இருந்த 3 பேரையும் பத்திரமாக கீழே அழைத்து வந்தனா். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertisement

Advertisement

தீ விபத்து கட்டிடத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த 24 மின்சார மீட்டா்களுக்குள் மட்டுமே ஏற்பட்டிருந்தது. அதிகாலை 2.30 மணிக்குள் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான உரிய காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments