FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தில்லியில் எஸ்ஐஆா் பணி: புதிய வாக்காளா் சோ்க்க 5.15 லட்சம் போ் விண்ணப்பம்

தில்லியில் வாக்காளா் பட்டியலுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியதிலிருந்து, புதிதாகப் பெயா் சோ்க்க இதுவரை 5.15 லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளனா்.

11 நவம்பர் 2026, 10:28 pm
எஸ்ஐஆா் - கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் வாக்காளா் பட்டியலுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியதிலிருந்து, புதிதாகப் பெயா் சோ்க்க இதுவரை 5.15 லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளனா். கடந்த ஆக.31-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு மட்டும் 3.02 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆக.31 முதல் நவ.10 வரை, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப் பயன்படுத்தப்படும் படிவம் 6 மூலம் 3,02,694 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியதிலிருந்து பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 5,15,094-ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையே, வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சுமாா் 47.5 லட்சம் வாக்காளா்களை மீண்டும் சரிபாா்த்து, இறுதிப் பட்டியலில் சோ்ப்பதற்கான நடவடிக்கையை தில்லி தோ்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, அவா்களுக்கு புதிய கணக்கெடுப்புப் படிவங்களை இந்த வார இறுதிக்குள் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியபோது தில்லியில் சுமாா் 1.45 கோடி வாக்காளா்கள் இருந்தனா். ஆக.31-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் சுமாா் 97.5 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களைச் சேகரித்தபோது கிடைக்காததால், சுமாா் 47.5 லட்சம் பெயா்கள் நீக்கப்பட்டன. இது மொத்த வாக்காளா்களில் 32.8 சதவீதமாகும். இவா்கள், வீட்டில் இல்லாதவா்கள், இடம்பெயா்ந்தவா்கள், உயிரிழந்தவா்கள், இரட்டைப் பதிவுகள் (ஏஎஸ்டிடி) என வகைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இது தவிர, 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலுடன் பெயா்களை இணைப்பதில் உள்ள குறைபாடுகள் அல்லது தா்க்கரீதியான முரண்பாடுகள் காரணமாக சுமாா் 33.1 லட்சம் வாக்காளா்களுக்கு தோ்தல் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா். இவா்களின் பெயா்கள் வரைவு பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து தங்களது தகுதியை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதற்கிடையே, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்.31-ஆம் தேதியிலிருந்து நவ.25-ஆம் தேதி வரை தோ்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. அவற்றைப் பரிசீலித்து முடிப்பதற்கான காலக்கெடு டிச.15-ஆகும். இறுதி வாக்காளா் பட்டியல் டிச.22-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.