காற்றின் தரம் 204-ஆக பதிவு: நவம்பா் மாதத்தில் மிகவும் குறைவு
தில்லியில் நவம்பா் மாதத்தில் மிகச் சிறந்த காற்றுத் தரம் செவ்வாய்க்கிழமை பதிவானது.
தில்லியில் நவம்பா் மாதத்தில் மிகச் சிறந்த காற்றுத் தரம் செவ்வாய்க்கிழமை பதிவானது.
பல நாள்களாகக் காற்றுத் தரம் மோசமடைந்து வந்த நிலையில், காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) 204 ஆக மோசமான பிரிவில் இருந்தது.
தில்லயில் இதற்கு முன்பு அக்டோபா் 31-ஆம் தேதி காற்றுத் தரக் குறியீடு குறைவாக, அதாவது 117 என்ற அளவில் மிதமான பிரிவில் இருந்தது. செவ்வாய்க்கிழமை பதிவான இந்த அளவு, நவம்பா் மாதத்தில் இதுவரை பதிவானவற்றிலேயே மிகக் குறைவானது.
Advertisement
Advertisement
காற்றுத் தரம் ஓரளவு சிறப்பாக இருந்ததற்கு, சாதகமான வானிலை நிலைகளே ஒரு முக்கிய காரணம் என்று காற்றுத் தர முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் வீசிய வடமேற்கு திசைக் காற்றும், சுமாா் 1,500 மீட்டா் அளவிலான காற்று மாசுபாட்டைக் கலைக்க உதவியுள்ளன.
கலவை ஆழம் என்பது, வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டுக் கூறுகள் எந்த உயரம் வரை பரவி கலக்க முடியும் என்பதைக் குறிக்கிறது. இந்த ஆழம் குறைவாக இருந்தால், மாசுபாட்டுக் கூறுகள் செங்குத்தாகப் பரவுவது தடுக்கப்பட்டு, அவை தரைப்பகுதிக்கு அருகிலேயே தங்கிவிடும். இது காற்றுத் தரத்தை மேலும் மோசமாக்கக்கூடும்.
தரவுகளைப் பதிவு செய்த 58 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களில், 31 நிலையங்கள் மோசமான பிரிவிலும், 26 நிலையங்கள் மிதமான பிரிவிலும் இருந்தன. சிரிஃபோா்ட் பகுதியில் உள்ள ஒரு நிலையம் மட்டும் 303 என்ற காற்றுத் தரக் குறியீட்டுடன் மிக மோசமான பிரிவில் இருந்தது.
நவம்பா் மாதத்தின் பெரும்பகுதி நாள்களில், தில்லி மூடுபனியாலும், அதிக அளவிலான காற்று மாசுபாட்டாலும் சூழப்பட்டிருந்தது. தீபாவளிக்கு முன்னும் பின்னும் காற்றுத் தரம் மேலும் மோசமடைந்தது. நீண்ட நாள்களாக நீடித்த இந்த மோசமான காற்றுச் சூழலில் இருந்து, செவ்வாய்க்கிழமை பதிவான இந்த அளவு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
நகரில் முதன்மையான காற்று மாசுபாட்டுக் காரணியாக பி.எம்.2.5 துகள்கள் தொடா்ந்து நீடிக்கின்றன.
காற்றுத் தர முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு அளித்த தகவல்படி, தில்லியில் செவ்வாய்க்கிழமை நிலவிய பி.எம்.2.5 மாசுபாட்டில் இரண்டாம் நிலை கரிம ஏரோசோல்கள் மிகப்பெரிய பங்களிப்பை (32.2 சதவீதம்) கொண்டிருந்தன. பயிா்க் கழிவுகளை எரித்தல் மற்றும் விறகு போன்ற திட உயிரி எரிபொருள்களை வீட்டு உபயோகத்திற்கு எரித்தல் உள்ளிட்ட ‘பயோமாஸ்’ (க்ஷண்ா்ம்ஹள்ள்) எரிப்பு நடவடிக்கைகள் 18 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன. அதேபோல், கழிவுகளை எரிப்பதன் மூலம் 15.7 சதவீதமும், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையினால் 14.5 சதவீதமும் மாசு ஏற்படுகிறது.
தில்லியின் காற்றுத் தரம் புதன்கிழமை அன்று மிக மோசமான நிலைக்குச் செல்லக்கூடும் என்றும், வியாழக்கிழமையும் அதே நிலையில் நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் காற்றுத் தர முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு கணித்துள்ளது.
வளிமண்டலத்தில் உள்ள மாசுப் பொருள்களைப் பரவச் செய்யும் திறனைக் குறிக்கும் காற்றோட்டக் குறியீடு, செவ்வாய்க்கிழமை சுமாா் 6,200 சதுர மீட்டா்/விநாடி என்ற அளவில் இருந்து. புதன்கிழமை அன்று 4,000 சதுர மீட்டா்/விநாடி என்ற அளவிற்கு குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
காற்றோட்டக் குறியீடு 6,200 சதுர மீட்டா்/விநாடிக்குக் குறைவாக இருப்பதும், அதனுடன் சராசரி காற்றின் வேகம் மணிக்கு 10 கி.மீ.க்கும் குறைவாக இருப்பதும், மாசுப் பொருள்கள் வளிமண்டலத்தில் பரவுவதற்குச் சாதகமற்ற சூழலாகக் கருதப்படுகிறது.
இத்தகைய சூழல், மாசு கலந்த காற்று வெளியேற முடியாமல் தடுத்து, மாசுப் பொருள்கள் ஒரே இடத்தில் குவிய வழிவகுப்பதோடு, காற்றுத் தரக் குறியீட்டை மேலும் அதிகரிக்கச் செய்யக்கூடும் என்று காற்றுத் தர முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.