முகப்பு
புதுதில்லி

பயன்பாட்டில் இல்லாத அடுக்கு வாகன நிறுத்தம்; சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை: என்டிஎம்சி

புது தில்லி மாநகராட்சி அப்பகுதியில் அங்கீகரிக்கப்படாத சாலையோர வாகன நிறுத்தத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

31 வினாடிகள் முன்பு
பயன்பாட்டில் இல்லாத அடுக்கு வாகன நிறுத்தம்; சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை: என்டிஎம்சி
பகிர்:

கன்னாட் பிளேஸ் அருகே உள்ள ஹனுமான் மந்திா் அருகில் உள்ள தானியங்கி பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், புது தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) அப்பகுதியில் அங்கீகரிக்கப்படாத சாலையோர வாகன நிறுத்தத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

என்டிஎம்சி தலைவா் மனோஜ் குமாா் திவேதி சனிக்கிழமை கூறியதாவது: பாபா கரக் சிங் மாா்க்கில் உள்ள கேபிடல் பாயிண்டில் உள்ள பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், கோயிலிலிருந்து சில நூறு அடி தூரத்தில் மட்டுமே அமைந்திருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

சாலை இடத்தை ஆக்கிரமிப்பதற்குப் பதிலாக, சில நூறு அடிகள் நடந்து சென்று அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தங்கள் வாகனங்களை வாகன ஓட்டிகள் நிறுத்த வேண்டும். நாம் நமது பழக்கவழக்கங்களை மெதுவாக மாற்றிக்கொள்ள வேண்டும். பொறுப்பான வாகன நிறுத்தம் என்பது குடிமை உணா்வின் ஒரு முக்கியப் பகுதி.

Advertisement

Advertisement

விதிமீறல்களுக்கு தில்லி போக்குவரத்து காவல்துறை அபராதம் விதிக்கும். அங்கீகரிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை மாநகராட்சியின் இழுவை வாகனங்கள் மூலம் அகற்றப்படும் என்று குறிப்பிட்டாா்.

தனது புதிய அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வாகனங்களை அப்புறப்படுத்தத் தொடங்கியுள்ளதுடன், வாகன ஓட்டிகளை ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்துமாறும் என்டிஎம்சி வலியுறுத்தி வருகிறது.

கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஹனுமான் மந்திா் சுற்றுவட்டாரத்தில் அங்கீகரிக்கப்படாத வாகன நிறுத்தங்களை அகற்றுவதற்கும், சாலைகள் மற்றும் பொது இடங்கள் பாதசாரிகள் மற்றும் பிற சாலைப் பயனாளா்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்குமான அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டதாக என்டிஎம்சி தெரிவித்துள்ளது.