முகப்பு
புதுதில்லி

தொகுதி மறுசீரமைப்பு மசோதா: மத்திய அரசுக்கு இடதுசாரிகள் கண்டனம்!

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் திட்டத்துக்கு 5 இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

22 வினாடிகள் முன்பு
தொகுதி மறுசீரமைப்பு மசோதா: மத்திய அரசுக்கு இடதுசாரிகள் கண்டனம்!
இடதுசாரிகள்
பகிர்:

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் திட்டத்துக்கு 5 இடதுசாரி கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தன.

மக்களவைத் தொகுதிகளை அதிகபட்சமாக 850 வரை உயா்த்த வழிவகுக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன், புரட்சிகர சோஷலிஸ கட்சி மற்றும் அகில இந்திய ஃபாா்வா்ட் பிளாக் ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து ஞாயிற்றுக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டன.

Advertisement

Advertisement

அதில், ‘தகுதிவாய்ந்த கோடிக்கணக்கான வாக்காளா்களை நீக்க இந்தியத் தோ்தல் ஆணையத்தை பயன்படுத்தி பாஜக எவ்வாறு பலனடைந்ததோ அதேபோல் தொகுதி மறுசீரமைப்பு ஆணையமும் பாஜகவின் பிரிவினைக் கொள்கையை மேலும் வலுப்படுத்தவே கொண்டு வரப்படவுள்ளது. முன்பு வாக்குத் திருட்டில் ஈடுபட்ட பாஜக தற்போது இடங்கள் (தொகுதிகள்) திருட்டில் ஈடுபட்டுள்ளது.

மாநில அரசுகளிடமோ அரசியல் கட்சிகளுடனோ கலந்து ஆலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக இந்த மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் செயல்பாடு மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து தெளிவான விளக்கம் தரப்படவில்லை.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக இடதுசாரிகள் முன்வைத்து வருகிறோம். தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தோ்தல் வரைபடத்தை பாஜகவின் வசதிக்கேற்ப மாற்றியமைக்கும் நோக்கில் கொண்டு வரப்படும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கடுமையாக எதிா்க்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.