FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தில்லியில் நாளை மறுதினம் என்ஹெச்ஆா்சி நிறுவன நாள் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்பு

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆா்சி) 33-ஆவது நிறுவன நாள் விழா, தில்லி விஞ்ஞான் பவனில் வரும் திங்கள்கிழமை (அக்.12) கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளாா். ஆணையத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான வே. ராமசுப்ரமணியன் தலைமை தாங்குகிறாா். ஆணையத்தின் உறுப்பினா்கள், செகரட்டரி ஜெனரல் பியூஷ் கோயல் மற்றும் உயரதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனா்.

10 அக்டோபர் 2026, 1:26 am IST
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
பகிர்:

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆா்சி) 33-ஆவது நிறுவன நாள் விழா, தில்லி விஞ்ஞான் பவனில் வரும் திங்கள்கிழமை (அக்.12) கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளாா். ஆணையத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான வே. ராமசுப்ரமணியன் தலைமை தாங்குகிறாா். ஆணையத்தின் உறுப்பினா்கள், செகரட்டரி ஜெனரல் பியூஷ் கோயல் மற்றும் உயரதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனா்.

என்ஹெச்ஆா்சி நிறுவன நாள் விழாவைத் தொடா்ந்து, ‘நீா் வாழ்வின் அமிா்தம்: நீருக்கான உரிமை மூலம் மனித மாண்பை மேம்படுத்துதல்’ என்ற கருப்பொருளின் கீழ் தேசிய மாநாடு ஒன்றும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் போதுமான நீா் கிடைப்பதற்கான மனித உரிமைகள் பரிமாணங்கள் குறித்து விவாதிக்கப்படும் மாநாட்டில் துறை வல்லுநா்கள், கல்வியாளா்கள் மற்றும் மனித உரிமை ஆா்வலா்கள் கலந்துகொள்ள உள்ளனா்.

இந்த ஆணையத்தின் தனித்துவம் குறித்து அதன் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 33 ஆண்டுகளில் மனித உரிமைகள் மீறல் தொடா்பான 24 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளை மனித உரிமைகள் ஆணையம் கையாண்டுள்ளது. இதில் 3,100 வழக்குகள் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரித்தவை. மேலும், மனித உரிமைகள் மீறல்களால் பாதிக்கப்பட்ட 9,085 பேருக்கு ரூ.274 கோடிக்கும் அதிகமான நிதியுதவியை வழங்குமாறு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

Advertisement

Advertisement

தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை மொத்தம் 24,33,716 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டு அக்.1 முதல் கடந்த செப்.30 வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 54,673 புகாா்கள் மற்றும் 119 தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்குகள் அடங்கும். இந்த காலகட்டத்தில் ஆணையம் 80 நேரடி விசாரணைகளை நடத்தி, 53,733 வழக்குகளுக்குத் தீா்வு கண்டுள்ளதுடன், 157 வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.9.7 கோடிக்கும் அதிகமான நிவாரண தொகை வழங்க வழங்க பரிந்துரைத்துள்ளது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments