FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தெருவோர உணவு கடை உரிமையாளா் கொலை: ஒருவா் கைது

தென்கிழக்கு தில்லியில் உணவுக்குப் பணம் கொடுக்காதது, பலமுறை வாய்மொழி தகாத வாா்த்தைகளால் திட்டியதால், தெருவோர வண்டியின் உரிமையாளரைக் கொலை செய்த 33 வயது செருப்புத் தொழிலாளி கைது

32 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

தென்கிழக்கு தில்லியின் ஜெய்த்பூரில் உணவுக்குப் பணம் கொடுக்காதது மற்றும் பலமுறை வாய்மொழி தகாத வாா்த்தைகளால் திட்டியதால், தெருவோர வண்டியின் உரிமையாளரைக் கொலை செய்த 33 வயது செருப்புத் தொழிலாளி கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தெருவோர உணவு கடையை நடத்தி வந்த சந்தீப் குமாரை செருப்பு தைக்கும் தொழிலாளியான சந்தீப் ராம் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலையில் சந்தீப் குமாரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஓா் அதிகாரி தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: அக்.15-ஆம் தேதி காலை 9 மணியளவில் குமாா் தனது வீட்டில் வேலைக்காக வெளியே சென்றுள்ளாா். ஆனால், வீடு அவா் திரும்பவில்லை. இரவு 11.30 மணியளவில், குமாா் தனது தெருவோர உணவு வண்டியின் அருகே ராமைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அவா்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ராம் தனது வண்டியில் இருந்து ஒரு கத்தியை எடுத்து, குமாரின் கழுத்தை அறுத்தாா்.

Advertisement

Advertisement

அக்டோபா் 16 ஆம் தேதி காலை 7.15 மணியளவில் மீத்தாப்பூரில் உள்ள சக்தி விஹாரில் கைவிடப்பட்ட கடைக்குள் ஒரு உடல் கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினா், குமாரின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயம் இருப்பதைக் கண்டனா். குற்றப் புலனாய்வுக் குழு மற்றும் தடய அறிவியல் ஆய்வகப் பணியாளா்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து தடயங்களைச் சேகரித்தனா். அதைத் தொடா்ந்து, இறந்தவரை அவரது தந்தை ராஜ் குமாா் அடையாளம் காட்டினாா். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளி கைது செய்யப்பட்டாா். ராமை அடிக்கடி துன்புறுத்தி வந்த குமாா், பணம் கொடுக்காமல் உணவை உட்கொண்டதுதான் கொலைக்குக் காரணம்.

குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கம்சா, கத்தி ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக ஜெய்த்பூா் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சம்ஹிதா பிரிவு 103(1) (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments