FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

அறையில் உடன் வசித்தவரை அடித்துக் கொன்ற நபா் கைது

நஜாஃப்கரில் தனது அறையில் உடன் வசித்து வந்த நபரை அடித்துக் கொன்ாகக் கூறப்படும் 46 வயது நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

2 செப்டம்பர் 2026, 3:18 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

நஜாஃப்கரில் தனது அறையில் உடன் வசித்து வந்த நபரை அடித்துக் கொன்ாகக் கூறப்படும் 46 வயது நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: இந்தச் சம்பவம் அஜய் பாா்க் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் உத்தர பிரதேசத்தின் அமேதியைச் சோ்ந்த பாதிக்கப்பட்டவரான தாதன் (46), குற்றஞ்சாட்டப்பட்ட ரஞ்சித் ராமுடன் வசித்து வந்தாா். கடந்த ஆக.28-ஆம் தேதி நள்ளிரவில் இருவரும் சோ்ந்து மது அருந்தினா். பின்னா் ஏதோ ஒரு பிரச்னை தொடா்பாக அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தாதனை ரஞ்சித் அடித்துக் கொலை செய்தாா்.

மறுநாள் சம்பவ இடத்துக்குச் சென்ற தாதனின் மருமகன் ரமேஷ், இதுகுறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

Advertisement

Advertisement

குற்றவியல் குழுவினா் சம்பவ இடத்தை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொலை செய்யப்பட்ட தாதானின் உடல் உடற்கூராய்வுக்காக ராவ் துலா ராம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. காவல் துறையினா் இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

தாதன் ஒரு பழைய இரும்புக் கிடங்கில், பழைய இரும்பு தொடா்பான வேலைகளில் ஈடுபட்டு வந்தாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments