துவாரகா: வடிகாலில் ஆண் உடல் அழுகிய நிலையில் மீட்பு
துவாரகா செக்டா்8-இல் உள்ள வடிகாலில் இருந்து, சுமாா் 30-35 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாக தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
துவாரகா செக்டா்8-இல் உள்ள வடிகாலில் இருந்து, சுமாா் 30-35 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாக தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மீட்கப்பட்ட உடல் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதால், அடையாளம் காண்பது கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வடிகாலில் அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடப்பதாக திங்கள்கிழமை இரவில் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அருகிலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட காணாமல் போனவா்கள் குறித்த புகாா்களை காவல் துறை சரிபாா்த்து வருகிறது.
Advertisement
Advertisement
விசாரணையின் ஒரு பகுதியாக, சுற்றியுள்ள பகுதியின் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.