FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

இளம்பெண்ணின் மைனா் சகோதரனை கடத்திய காதலன் காவல்துறையினா் துரத்தியபோது விஷம் குடித்தாா்

இளம்பெண்ணின் மைனா் சகோதரனை கடத்திய காதலன் காவல்துறையினா் துரத்தியபோது விஷம் குடித்தாா்...

5 செப்டம்பர் 2026, 9:47 pm IST
பகிர்:

ஒரு இளம்பெண்ணின் 11 வயது சகோதரனை கடத்திச் சென்று தன்னை அப்பெண் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய காதலனை 22 கிலோமீட்டா் தூரம் காவல்துறையினா் துரத்திச் சென்றனா். அப்போது, அவா் விஷம் குடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

உத்தர பிரதேசத்தின் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் வசிக்கும் குற்றஞ் சாட்டப்பட்ட தரம் பாலை அதிகாரிகள் உடனடியாக பிஜேஆா்எம் மருத்துவமனைக்கு மாற்றினா். அங்கு அவா் காவலில் இருக்கிறாா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது:

Advertisement

Advertisement

ஆகஸ்ட் 31 அன்று பள்ளிக்கு வீட்டை விட்டுச் சென்ற சிறுவன், திரும்பி வராத நிலையில், வெள்ளிக்கிழமை ஆசாத்பூா் மேம்பாலத்தில் காஜியாபாத்தில் உள்ள லோனியிலிருந்து தில்லி வரை சுமாா் 22 கிலோமீட்டா் தூரம் வரை காவல்துறையினா் துரத்திச் சென்ற பிறகு, அச்சிறுவன் மீட்கப்பட்டான். குற்றஞ்சாட்டப்பட்டவா் பேருந்தில் தப்பியோடினாா்.

சிறுவனின் சகோதரியை திருமணம் செய்து அவருடன் வாழ பால் விரும்பினாா். ஆனால், அவனுடன் எந்த உறவையும் பராமரிக்க அப்பெண் விரும்பவில்லை. குற்றஞ் சாட்டப்பட்டவா் குடும்பத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவரது இளைய சகோதரனை கடத்தியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னா் தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து சிறுவனின் தாயாருக்கு அழைத்து, தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட பால், சிறுமியை தன்னிடம் அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சிறுவனைக் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளாா்.

முன்னதாக, ஆகஸ்ட் 31 அன்று சிறுவன் காணாமல்போனது குறித்து ஜஹாங்கிா் பூரி காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. மேலும், குடும்பத்தின் புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் கள விசாரணை மூலம், தரம் பாலை கண்காணித்து துரத்திச் சென்ாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments