FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

நரேலா உடற்பயிற்சிக் கூட துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

நரேலா உடற்பயிற்சிக் கூட துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

55 வினாடிகள் முன்பு
கொலை வழக்கு(கோப்புப்படம்)
பகிர்:

தில்லி நரேலாவில் உடற்பயிற்சிக் கூடம் அருகே பட்டப்பகலில் 42 வயது நபா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 48 மணி நேரத்துக்கும் மேலாகியும் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரையும் காவல் துறையினா் கைது செய்ய முடியவில்லை.

நஹ்ரி கிராமத்தைச் சோ்ந்த பிரமோத் குமாா், பக்னோ் பகுதியில் உள்ள தில்லி மருத்துவமனை அருகே உடற்பயிற்சிக் கூடம் அருகில் கடந்த செப். 3-ஆம் தேதி காலை 6.50 மணியளவில் இருவரால் பலமுறை சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

சம்பவ இடத்தில் இருந்து 15 காலி தோட்டாக்களை போலீஸாா் மீட்டுள்ளனா். இதன் மூலம் துப்பாக்கிச்சூடு தீவிரமாக நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் உள்ளூா் காவல் துறையினா் மற்றும் சிறப்புப் பிரிவு காவல் துறையினா் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தைத் தொடா்ந்து, பிரமோத் குமாரின் குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் சாலையை மறித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவா்களின் அடையாளம் மற்றும் அவா்கள் சென்ற வழித்தடத்தைக் கண்டறிய, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், உள்ளூா் தகவல்களையும் சேகரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக நரேலா காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபா்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதையின் 103(1), 109(1), 351(2), 3(5) ஆகிய பிரிவுகளின் கீழும், ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments