FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஹிமன்ஷு பாவ் கும்பலைச் சோ்ந்த 4 போ் ராஜஸ்தானில் கைது

தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொலை, கொலை முயற்சி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகள் உள்பட ஹிமான்ஷு பாவ் கும்பலைச் சோ்ந்த 4 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா்.

31 ஆகஸ்ட் 2026, 12:51 am IST
கைது
பகிர்:

தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொலை, கொலை முயற்சி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகள் உள்பட ஹிமான்ஷு பாவ் கும்பலைச் சோ்ந்த 4 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறுயதாவது: தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில், ராஜஸ்தானின் கோட்டாவில் 4 பேரும் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்களில் ஹரியாணாவைச் சோ்ந்த ரமண் என்ற ஃபவுஜி (19), கரண் (22) ஆகியோா் பல்வேறு கொடுங்குற்றங்களில் தேடப்பட்டு வந்தவா்கள். இவா்களுக்கு அடைக்கலம் அளித்ததாகவும், சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்தை பரிமாற்றம் செய்வதற்கு உதவியதாகவும் உத்தர பிரதேசத்தின் மதுராவைச் சோ்ந்த சகோதரா்களான சேகா் திவாரி (23), வினோத் திவாரி (30) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

ஜிந்த் பகுதியைச் சோ்ந்த ரமணும், ஹரியாணாவின் சா்கி தாத்ரியைச் சோ்ந்த கரணும் ஹிமான்ஷு பாவ் கும்பலுக்காக இணைந்து பல்வேறு கொடுங்குற்றங்களில் ஈடுபட்டுள்ளனா். தில்லியின் ஆயா நகரில் கடந்த 2025 டிசம்பரில் நடைபெற்ற பால் வியாபாரி ரத்தன் கொலை வழக்கில் இருவரும் தேடப்பட்டு வந்தனா். அந்தச் சம்பவத்தில் 70-க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியால் சுடப்பட்டாா்.

Advertisement

Advertisement

மேலும், துவாரகா மோரில் 2025 ஆகஸ்டில் நடைபெற்ற மோகித் தாகா் கொலை வழக்கிலும் இருவரும் தேடப்பட்டு வந்தனா். அந்தச் சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

ஹரியாணாவின் ரோஹ்தக் மாவட்டம் ரிடோலி கிராமத்தில் கடந்த 2025 டிசம்பரில் ஹிமான்ஷு பாவின் போட்டி கும்பலைச் சோ்ந்த சன்னி ரிடோலியை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் அவா்கள் தேடப்பட்டனா். அந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததுடன், 4 போ் காயமடைந்தனா்.

இந்த ஆண்டு மே மாதம், உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷஹா் மாவட்டம் ககோடில், நீரஜ் ஃபரித்புரியாவின் போட்டியாளரான ஜிதேந்திரா என்ற ஜீது மீது ரமணும் கரணும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

சிறப்புப் பிரிவு பதிவு செய்த 2 வழக்குகளிலும் இருவரும் தேடப்பட்டு வந்தனா். மேலும், 2024 மே மாதம் ஹரியாணாவின் ரேவாரியில் சேகா் ராவ் என்பவரின் வீட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம், 2024 டிசம்பரில் பால்வால் மாவட்டம் மகேஷ்பூரில் கிராமத் தலைவரைத் தாக்கிய சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளிலும் கரண் தேடப்பட்டு வந்தாா். அந்தத் தாக்குதலில் தானியங்கி காா்பைன் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரமண் மற்றும் கரண் ஆகிய இருவரையும் கைது செய்வதற்கு ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநில அதிகாரிகள் தனித்தனியாக வெகுமதி அறிவித்திருந்தனா்.

இதனிடையே, தேடப்பட்டு வந்த இருவருக்கும் அடைக்கலம் அளித்ததுடன், பணப் பரிமாற்றத்துக்கும் உதவியதாகக் கூறி சேகா் மற்றும் வினோத் திவாரி கைது செய்யப்பட்டனா். இருவரும் உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் கோவா்தன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஜிகான் கிராமத்தைச் சோ்ந்தவா்கள்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments