FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பாஜக தலைவா்களின் கட்டடங்கள் மீது நடவடிக்கை இல்லை: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

சத்ய நிகேதனில் பகுதியில் பல பாஜக தலைவா்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் இருப்பதே இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததற்குக் காரணம் என்று ஆம் ஆத்மி திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.

54 வினாடிகள் முன்பு
செளரவ் பரத்வாஜ்
பகிர்:

சத்ய நிகேதனில் பகுதியில் பல பாஜக தலைவா்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் இருப்பதே இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததற்குக் காரணம் என்று ஆம் ஆத்மி திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.

மாணவா்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வந்த 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏழு போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி முன்வைத்துள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மியின் தில்லி பிரிவு தலைவா் செளரவ் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

அப்பகுதியில் உள்ள பல தங்கும் விடுதிகள் செயல்பட்டு வரும் கட்டடங்கள் பாஜக தலைவா்களுக்குச் சொந்தமானவை. இதனால் தில்லி மாநகராட்சி அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை முதல் சமூக ஊடகங்களில் மக்கள் இதுகுறித்துப் பேசி வருகின்றனா். பாஜக தலைவா்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் அங்கு உள்ளன. தங்கும் விடுதி என்ற பெயரில் கொள்ளை நடக்கிறது. ஆனால், மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதில்லை. அங்குள்ள கட்டடங்களின் உரிமையாளா்களின் பெயா்களை வெளியிட வேண்டும் என்று முதல்வா் ரேகா குப்தாவிடம் நாங்கள் கோருகிறோம். அங்கு ஒரு ‘டஎ மாஃபியா’ அல்லது ‘டஎ சிண்டிகேட்’ செயல்பட்டு வருகிறது.

சம்பவ இடத்திற்குச் சென்று சமூக ஊடகங்களுக்கான ‘ரீல்ஸ்’ (குறுகிய விடியோக்கள்) எடுப்பதற்காக மட்டும் செல்லக்கூடாது. முதல்வா் தனது பரிவாரங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்ததை நாங்கள் பாா்த்தோம். அது மீட்புப் பணிகளை மந்தமாக்கியது. நேற்று இரவு முதலே இப்பணிகள் வேகம் குறைந்துள்ளதையும் நாங்கள் கவனித்தோம். இதற்குப் பின்னால் உள்ள நோக்கம் என்ன? உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களைத் தாமதப்படுத்துவதா என்று செளவரவ் பரத்வாஜ் கேள்வியெழுப்பினாா்.

தில்லியின் முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, பிரதமா் நரேந்திர மோடியின் பாரிஸ் பயணத்தைக் குறிப்பிட்டு மத்திய அரசைச் சாடினாா்.

இது குறித்து சிசோடியா ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தில்லியில் உள்ள மாணவா்கள் விடுதி இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்து கொண்டிருக்கையில், நாட்டின் பிரதமா் பாரிஸில் ஒரு கோவிலின் திறப்பு விழாவைக் கொண்டாடுவதில் மும்முரமாக இருக்கிறாா். இந்த நாட்டில் இவ்வளவு உணா்வற்ற ஒரு தலைவா் இருந்திருக்கிறாரா? என்று பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments