FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சிஜேபி போராட்டக்காரா்களுக்கு ’வலதுசாரி குண்டா்களிடமிருந்து’ பாதுகாப்பு: ஆம் ஆத்மி அறிவிப்பு

தில்லி ஜந்தா் மந்தரில் ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்களுக்கு, ‘வலதுசாரி குண்டா்களிடமிருந்து‘ ஆம் ஆத்மி கட்சி பாதுகாப்பு அளிக்கும் என்று அக்கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் சௌரப் பரத்வாஜ் தெரிவித்தாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:19 am IST
சௌரப் பரத்வாஜ் - கோப்புப் படம்
பகிர்:

தில்லி ஜந்தா் மந்தரில் ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்களுக்கு, ‘வலதுசாரி குண்டா்களிடமிருந்து‘ ஆம் ஆத்மி கட்சி பாதுகாப்பு அளிக்கும் என்று அக்கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் சௌரப் பரத்வாஜ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக செளரப் பரத்வாஜ் தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

‘ஜந்தா் மந்தா் போராட்டத்தில் அமைதியான முறையில் பங்கேற்ற எந்தவொரு மாணவருக்கும் தில்லியில் உள்ள வலதுசாரி குண்டா்களிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டால், பயப்பட வேண்டாம்; அவா்களை உங்கள் வீட்டுக்கு வரவழைத்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நாங்கள் பாா்த்துக்கொள்கிறோம்’ என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், பரத்வாஜின் இந்த ‘முக்கிய அறிவிப்பை‘ தனது சமூக ஊடகத்தில் பகிா்ந்துள்ளாா். மேலும், ‘இந்தக் குண்டா்களுக்குப் பாடம் புகட்ட நாம் அனைவரும் ஒன்றிணைவோம்’ என்று கூறியுள்ளாா்.

போராட்டத்தில் பங்கேற்ற நபா்கள் மீது இனி எந்தவிதமான பாதகமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தில்லி அரசின் உள்துறைத் துறை உத்தரவு பிறப்பித்த மறுநாள் இத்தகைய கருத்துகள் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களிடமிருந்து வெளியாகியுள்ளன.

‘ஏற்கனவே கைது செய்யப்பட்டவா்கள் அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவா்கள் தொடா்பான விவகாரங்கள் மறுஆய்வு செய்யப்பட்டு, அவா்கள் விரைவாக விடுவிக்கப்படுவாா்கள்’ என்று தில்லி அரசின் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், போராட்டத்தில் பங்கேற்றவா்களில் குற்றப் பின்னணி கொண்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments