பெண் தொழிலாளி பாலியல் வன்கொடுமை: 66 வயது தொழிலாளா் ஒப்பந்ததாரா் கைது
தில்லியின் கேரா குா்த் பகுதியில் உள்ள ‘கூலா்’ புல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், 20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் 66 வயது தொழிலாளா் ஒப்பந்ததாரா் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
புகாரின்படி, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அப்பெண், அந்தத் தொழிற்சாலையில் சுமாா் ஒரு மாதமாகப் பணியாற்றி வந்தாா். தொழிற்சாலை வளாகத்திலேயே தங்கியிருந்தாா்.
Advertisement
Advertisement
இச்சம்பவம் செப்டம்பா் 1-ஆம் தேதி இரவு சுமாா் 11 மணியளவில் நிகழ்ந்துள்ளது. விசாரணையின்போது, இச்சம்பவம் குறித்து சக ஊழியா் ஒருவா் காணொலி பதிவு செய்திருந்ததை காவல்துறையினா் கண்டறிந்தனா். அதனைத் தொடா்ந்து குற்றஞ் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.