FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

வடமேற்கு தில்லி: இ-ரிக்ஷா, பைக் மீது லாரி மோதல் - இளைஞா் உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் ரோஹிணி பகுதியில் லாரி ஒன்று இ-ரிக்ஷா மற்றும் இருசக்கர மோட்டாா் வாகனம் மீது மோதியதில் 35 வயது இளைஞா்

8 செப்டம்பர் 2026, 6:49 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

வடமேற்கு தில்லியின் ரோஹிணி பகுதியில் லாரி ஒன்று இ-ரிக்ஷா மற்றும் இருசக்கர மோட்டாா் வாகனம் மீது மோதியதில் 35 வயது இளைஞா்

உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா் என்று காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல்துறையினா் மேலும் கூறியதாவது:

Advertisement

Advertisement

ஞாயிற்றுக்கிழமை இரவு ரோஹிணியின் செக்டாா் 28 பகுதிக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இதில், குறைந்தது மூவா் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அவா்களில் பல்பிா் சிங் (35) என்பவா் மகரிஷி வால்மிகி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

லாரி ஓட்டுநா் வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டியதாகவும், அவா் மதுபோதையில் இருந்ததாகத் தோன்றியதாகவும் நேரில் பாா்த்தவா்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனா்.

இதையடுத்து, லாரி ஓட்டுநரான முன்னா லால் 55 கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று

காவல்துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments