நெல்லை அருகே கார்-லாரி மோதல்:வழக்குரைஞர் சாவு
திருநெல்வேலி, அக். 8: திருநெல்வேலி அருகே சனிக்கிழமை கார் மீது லாரி மோதியதில் வழக்குரைஞர் இறந்தார். 3 பேர் காயமடைந்தனர். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பூக்கடைத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (82
திருநெல்வேலி, அக். 8: திருநெல்வேலி அருகே சனிக்கிழமை கார் மீது லாரி மோதியதில் வழக்குரைஞர் இறந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பூக்கடைத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (82). வழக்குரைஞராக இருந்தார்.
இவர் கோவையில் வசித்துவரும் மகள் சங்கரியைப் பார்க்க சில நாள்களுக்கு முன்பு மனைவி சுப்புலட்சுமியுடன் சென்றார்.
Advertisement
Advertisement
பின்னர், கணேசன், சுப்புலட்சுமி, சங்கரி, அவர் மகள் மீனாட்சி ஆகியோர் கோவையில் இருந்து காரில் சனிக்கிழமை அம்பாசமுத்திரம் வந்து கொண்டிருந்தனர். கோவை வரதராஜபுரத்தைச் சேர்ந்த ஜான் காரை ஓட்டினார்.
கங்கைகொண்டான் அருகேயுள்ள பாப்பான்குளம் விலக்குப் பகுதியில் கார் வந்தபோது, பாப்பான்குளத்திலிருந்து பிரதான சாலையை நோக்கி வந்த லாரி, கார் மீது மோதியது. இதில், கணேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
காயமடைந்த சுப்புலட்சுமி, சங்கரி, ஓட்டுநர் ஜான் ஆகியோர் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீனாட்சி லேசான காயமடைந்தார்.
கங்கைகொண்டான் போலீஸôர் வழக்குப் பதிந்து கயத்தாறு அருகேயுள்ள மூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான மருதையாவை (36) கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.