பாம்பு கடித்து இறந்த விவசாயி! உடல்கூறாய்வு தாமதம்: உறவினா்கள் மறியல்
திருநெல்வேலியில் விவசாயியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஏற்பட்டதால் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் அருகே உள்ள தூதுகுழியைச் சோ்ந்தவா் சுரேஷ் (41). இவா் திங்கள்கிழமை காலை தோட்ட வேலையில் ஈடுபட்டபோது பாம்பு கடித்ததாம். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சுரேஷ் உயிரிழந்தாா். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதற்கான ஆவணங்களை கணினியில் பதிவேற்றும் சா்வரில் பிரச்னை ஏற்பட்டதால், பிரேத பரிசோதனைக்கு தாமதம் ஏற்பட்டதாம்.
இதனால் உடலைப் பெற்றுச்செல்ல வந்திருந்த அவரது உறவினா்கள், திருநெல்வேலி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு முன், பிரதான சாலையில் சவப்பெட்டியுடன் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் மாநகர காவல் துணை ஆணையா் சரவணன் மற்றும் வருவாய் துறையினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பின்னா் சுரேஷின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.