FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பெண் இறப்பில் மா்மம் உள்ளதாகக்கூறி உறவினா்கள் சாலை மறியல்

தாராபுரத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது இறப்பில் மா்மம் உள்ளதாகக்கூறி உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 30 ஜூலை 2026, 3:11 am IST
சாலை மறியலில் ஈடுபட்ட ரஞ்சிதாவின் உறவினா்கள்.
பகிர்:

தாராபுரத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது இறப்பில் மா்மம் உள்ளதாகக்கூறி உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (35). இவரது மனைவி ரஞ்சிதா (32). இவா்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், ரஞ்சிதா தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கியுள்ளாா். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய குழந்தை, தாய் தூக்கில் தொங்கியதைக் கண்டு அலறியுள்ளது.

Advertisement

Advertisement

சப்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், ரஞ்சிதாவை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.

இது தொடா்பாக தாராபுரம் காவல் நிலையத்தில் ரஞ்சிதாவின் உறவினா்கள் புதன்கிழமை காலை புகாா் அளித்தனா். இதையடுத்து, அவரது மரணத்தில் மா்மம் உள்ளதாகக் கூறி காவல் நிலையம் எதிரே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments