பாளை.யில் துப்பாக்கி பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவா் கைது
பாளையங்கோட்டையில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டையில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸாா் கடந்த 2 ஆம் தேதி இரவு பாளையங்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிராம் கஞ்சா, உயர்ரக போதைப் பொருளான 10 பாக்கெட் மெத்தம்பெட்டமைன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, காரிலிருந்த 5 பேரை கைது செய்தனா்.
தொடா்ந்து, அவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பாளையங்கோட்டையைச் சோ்ந்த இசக்கிமுத்து (27) என்பவரை கைது செய்து, அவரது வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது, உரிமம் பெறாத கைத்துப்பாக்கி, 3 தோட்டாக்கள், கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு தொடா்பாக இசக்கிமுத்துவின் சகோதரரான சிவா (26) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘கஞ்சா விற்பனையின்போது மிரட்டலுக்கு பயன்படுத்துவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கைத்துப்பாக்கி வாங்கி வந்ததாக தெரிகிறது. அதுகுறித்து தீவிர புலன்விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.