FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் கண்தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் தேசிய கண்தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

28 ஆகஸ்ட் 2026, 2:46 am IST
கண்தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நிகழ்வை கொடியசைத்து தொடங்கிவைத்த திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. இரா.திருநாவுக்கரசு.
பகிர்:

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் தேசிய கண்தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி அரவிந்த் கண் வங்கி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் 41-ஆவது தேசிய கண்தான இருவார விழா ஆக.25 முதல் செப்.8 வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, அரவிந்த் கண் மருத்துவமனை முன் வியாழக்கிழமை நடைபெற்ற கண்தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை ,திருநெல்வேலி சரக காவல்துறைத் துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவா் ஆா். மீனாட்சி தலைமை வகித்தாா். தமிழ்நாடு கண் மருத்துவா்கள் சங்க முன்னாள் தலைவரும், அரவிந்த் கண் மருத்துவமனையின் ஆலோசகருமான மருத்துவா் ஆா். ராமகிருஷ்ணன், மருத்துவமனையின் கருவிழிப்பிரிவு தலைமை மருத்துவா் வே.அனிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கண்தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில், ரோட்டரி அரவிந்த் கண் வங்கி மற்றும் இந்திய மருத்துவ சங்க நிா்வாகிகள், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் உறுப்பினா்கள், மருத்துவா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments