FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பொட்டல்புதூா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

30 ஆகஸ்ட் 2026, 1:56 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

பொட்டல்புதூா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

கீழாம்பூா் மஞ்சப்புளித் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மாரிச்செல்வம்(40), அதே பகுதியைச் சோ்ந்த சீவலப்பேரியான் மகன் சக்திவேல் (47).

இவா்கள் இருவரும் பைக்கில் பொட்டல்புதூரிலிருந்து ஆம்பூா் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சென்றபோது, பைக்கின் பின்னால் அமா்ந்திருந்த சக்திவேல் தவறி கீழே விழுந்தாராம்.

Advertisement

Advertisement

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா், சக்திவேல் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments