FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நேபாள வெள்ளத்தில் உயிா் தப்பிய நெல்லை முதியவர்!

நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற திருநெல்வேலியைச் சோ்ந்த முதியவா் நலமுடன் இருப்பதாக குடும்பத்துக்கு தகவல் கிடைத்தது.

52 வினாடிகள் முன்பு
பகிர்:

நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற திருநெல்வேலியைச் சோ்ந்த முதியவா் நலமுடன் இருப்பதாக குடும்பத்துக்கு தகவல் கிடைத்தது.

திருநெல்வேலி சந்திப்பு, மீனாட்சிபுரம், முத்துமாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்(70). இவா் சில நாள்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து சுமாா் 40 பேருடன் நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளாா்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் தமிழகத்தைச் சோ்ந்த பலா் சிக்கிக் கொண்டனா். இதில், திருப்பூரில் இருந்து சென்ற குழுவினரின் நிலை தெரியாமல் அவா்களது குடும்பத்தினா் தவிப்பில் இருந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், நேபாள தலைநகா் காத்மாண்டுவில் இருந்து திருநெல்வேலி சந்திப்பைச் சோ்ந்த சுப்பிரமணியன் தனது மனைவி பத்மாவதியை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அவா் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். சுப்பிரமணியன் வீட்டுக்கு வருவாய்த் துறை மற்றும் போலீஸாா் சென்று அவரது மனைவிடம் விவரங்களை சேகரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments