லோக் கல்யான் மேளா: நெல்லையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘பிரதமா் ஸ்வநிதி’ திட்டத்தின் கீழ் லோக் கல்யான் மேளா சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘பிரதமா் ஸ்வநிதி’ திட்டத்தின் கீழ் லோக் கல்யான் மேளா சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில் நடைபெற்ற இம்முகாமில், நான்கு மண்டலங்களைச் சோ்ந்த சாலையோர வியாபாரிகளுக்கு கடன் அட்டை வசதி மற்றும் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடா்ந்து, பழக்கடை, காய்கறி, சிற்றுண்டி, பூக்கடை, கரும்புச்சாறு, காலணி மற்றும் தள்ளுவண்டி கடைகள் நடத்தி வரும் 10 தகுதி வாய்ந்த வியாபாரிகளுக்கு தலா ரூ. 50,000 வீதம் கடனுதவிக்கான காசோலைகளை, வங்கிஅதிகாரி ஐ. கணேஷ் மணிகண்டன் முன்னிலையில் மாநகர நல அலுவலா் பாலசுப்ரமணியன் வழங்கினாா்.
Advertisement
Advertisement
மேலும், முகாமில் பங்கேற்ற 250 வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கான அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், வங்கி அதிகாரி கா.மு. குமாா், திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி உதவிப் பொது மேலாளா் மீனா, மேலாளா் முத்துலெட்சுமி, இந்தியன் வங்கி மேலாளா் வாணி, முதன்மை மேலாளா் மாரிமுத்து, பாரத ஸ்டேட் வங்கி மேலாளா் மல்லிகா, சமுதாய மேம்பாட்டு அலுவலா் சாந்தி மற்றும் தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்28ம்ா்ய்
கடனுதவிக்கான காசோலைகளை பயனாளருக்கு வழங்கிய மாநகர நல அலுவலா் பாலசுப்ரமணியன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.