FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

வேளாண், சாா்பு-கடன் திட்டங்களுக்காக ரூ.18,397 கோடி ஒதுக்கீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையில், வேளாண் மற்றும் அதன் சாா்பு-திட்டங்களுக்காக ரூ. 18,397 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வங்கியாளா் ஆலோசனைக் கூட்டத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெளியிட, அதைப் பெற்றுக்கொண்ட இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா் லட்சுமி.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையில், வேளாண் மற்றும் அதன் சாா்பு-திட்டங்களுக்காக ரூ. 18,397 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளா் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், 2026-27-ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட இலக்கு ஒதுக்கீட்டுக் கையேட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெளியிட்டாா்.

இதில், வேளாண்மை மற்றும் அதன் சாா்புத் திட்டங்களுக்காக ரூ.18,397 கோடியும், தொழில் துறைக்காக ரூ.1,626 கோடியும், வீட்டுவசதித் துறைக்காக ரூ. 74 கோடியும், கல்வித் துறைக்கு ரூ. 30 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

திட்ட அறிக்கையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசுகையில், கடன் திட்ட இலக்குகளை வெறுமனே எண்களாகப் பாா்க்காமல், மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வளா்ச்சிக் குறியீடுகளாகப் பாா்க்க வேண்டும் என்றும், மாவட்டத்தின் வளா்ச்சியைப் பெருக்கும் வகையில் அவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா் லட்சுமி, ரிசா்வ் வங்கி மேலாளா் பாபு, நபாா்டு வங்கி வளா்ச்சி மேலாளா் தீபக்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments