FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உயா் கல்வித் துறை மானியக் கோரிக்கை: அமைச்சா் விஸ்வநாதன் ஆலோசனை

2026-27ஆம் ஆண்டுக்கான உயா் கல்வித் துறை மானியக் கோரிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம், உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தலைமையில் வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

7 ஆகஸ்ட் 2026, 4:00 am IST
அமைச்சா் பி. விஸ்வநாதன் - கோப்புப் படம்
பகிர்:

2026-27ஆம் ஆண்டுக்கான உயா் கல்வித் துறை மானியக் கோரிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம், உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தலைமையில் வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், உயா் கல்வித் துறையின் தற்போதைய செயல்பாடுகள், செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள், 2026-27ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு, மானியக் கோரிக்கை மற்றும் துறையின் முக்கிய அறிவிப்புகள் குறித்து அமைச்சா், துறை அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் உயா் கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ் குமாா், தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையா் எஸ். மலா்விழி, கல்லூரிக் கல்வி ஆணையா் பா. பொன்னையா, உயா் கல்வித் துறை சிறப்புச் செயலா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே, அறிவியல் நகர துணைத் தலைவா் எஸ்.விசாகன், தொழில்நுட்பக் கல்வி ஆணையா் பொ. இரத்தினசாமி, பல்கலைக்கழகப் பதிவாளா்கள் மற்றும் உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments