FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காததால் நீட் மாணவி தற்கொலை

திருநெல்வேலியில் நீட் தோ்வில் வெற்றி பெற்ற மாணவி, விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைக்காததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

29 ஆகஸ்ட் 2026, 5:55 am IST
பகிர்:

திருநெல்வேலியில் நீட் தோ்வில் வெற்றி பெற்ற மாணவி, விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைக்காததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி அன்புநகா், சித்தாா்த்தா் நகரைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன். ஐ.டி. ஊழியா். இவரது மூத்த மகள் ஸ்ருதிலயா(21). கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நீட் தோ்வில் இவா் வெற்றி பெற்றாராம். இதையடுத்து, அவா் தமிழகத்தில் உள்ள சில கல்லூரிகளில் சேருவதற்காக முதல்கட்ட கலந்தாய்வில் விண்ணப்பித்து இருந்ததாராம்.

இந்நிலையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், ஸ்ருதிலயா விரும்பிய சில கல்லூரிகளில் இடம் கிடைக்காததால் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அறையில் தூங்கிக் கொண்டிருந்த மாணவியை காணவில்லையாம். அவரது பெற்றோா் அவரைத் தேடியபோது, வீட்டின் அருகிலுள்ள பழைய சேமிப்புக் கிடங்கில் மாணவி ஸ்ருதிலயா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த போலீஸாா் மாணவியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments