தாமிரவருணி பாதுகாப்பை வலியுறுத்தி பாபநாசத்தில் இருந்து சைக்கிள் பயணம்
தாமிரவருணி பாதுகாப்பு, தூய்மைகள் குறித்த விழிப்புணா்வை வலியுறுத்தி ‘வீ த லீடா்’ அமைப்பு, நம்ம ஊரு நம்ம ஆறு என்ற மக்கள்இயக்கம் சாா்பில் பாபநாசத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பயணம் தொடங்கியது. .
இந்த அமைப்பின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தாமிரவருணிதூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை தாமிரவருணி நதியின் தூய்மை, நீா்வளம், சுற்றுச்சூழல் மற்றும் நதியை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை சுமாா் 126 கி.மீ. தொலைவு ‘வீ த லீடா்’ அமைப்பின் தன்னாா்வலா்கள்மு. சுகன், ஜிஎஸ். கணேஷ் ராகவ், ஜெய்கணேஷ், சுரேஸ், ராஜா, மாரி ஆகிய 6 போ் கொண்ட குழுவினா் சைக்கிள் பசுமை பயணம் தொடங்கினா்.
Advertisement
Advertisement
பசுமை பயணத்தை வீ த லீடா் தன்னாா்வலா் ச. வேல்கண்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
பசுமை பயணத்தின்போது, தாமிரவருணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களிடையே தாமிரவருணி விழிப்புணா்வுகுறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது, ஆற்றங்கரைகளில் விதைப் பந்துகள் வீசுவது ஆகியவை மேற்கொள்ளப்படும். நிகழ்ச்சியில் முன்னதாக, பாபநாசநாதா் கோயில் அருகே தாமிரவருணி ஆற்றில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பசுமைப் பயணம் பாபநாசம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம் வழியாக புன்னக்காயல் சென்றடைகிறது. சைக்கிள் பசுமை பயணத் தொடக்க நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் உள்பட பலா்கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.