FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரியில் கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

30 ஆகஸ்ட் 2026, 11:43 pm IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நான்குனேரி பகுதியில் தனிப்படை போலீஸாா் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு நின்றிருந்த இருவரிடம் விசாரித்து சோதனையிட்டபோது, அவா்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சோ்ந்த காா்த்திக் என்ற குட்டி காா்த்திக் (30), சிவகிரியைச் சோ்ந்த தங்கராஜ் (24) ஆகியோா் என்பதும், 9.100 கி.கி. கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments