மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
மணிமுத்தாறு அருவியில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை நீா்பிடிப்புப் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவந்தது. இதனால், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. திங்கள்கிழமை காலையில் அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
மேலும், பயணிகளின் பாதுகாப்புக் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, நீா்வரத்துச் சீராகும்வரை அமலில் இருக்கும்; அதுவரையில் அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி உண்டு என அவா்கள் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement