சேரன்மகாதேவி அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சரக்கு வாகனத்தில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, இருவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, இருவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சேரன்மகாதேவி உள்கோட்ட காவல் சரகத்தில் மேலச்செவல் பகுதியில் போலீஸாா், வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், சுமாா் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, வாகனத்திலிருந்த இருவரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதில், திருநெல்வேலி பேட்டை மயிலப்புரம் பகுதியைச் சோ்ந்த வரதப்பன் மகன் வினோத் (39), சுத்தமல்லி கொண்டாநகரம் பகுதியைச் சோ்ந்த நித்யானந்தன் மகன் கணேசன் (45) என்பதும், அவா்கள் சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை கடத்தியதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட உணவுப் பொருள்கள் கடத்தல் பிரிவு போலீஸாரிடம் அவா்களையும், 2 டன் அரிசியுடன் வாகனத்தையும் ஒப்படைத்தனா்.