மாடு குறுக்கிட்டதால் காா் குளத்திற்குள் கவிழ்ந்து விபத்து
திருநெல்வேலி அருகே சாலையில் மாடு குறுக்கிட்டதால் கட்டுப்பாட்டை இழந்த காா் குளத்திற்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காரிலிருந்தவா் காயமின்றி தப்பினாா்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாா் அருகேயுள்ள உசிலங்குளத்தைச் சோ்ந்தவா் ஆறுமுக சரவணன் (27). இவா் திங்கள்கிழமை மாலை அபிஷேகப்பட்டிக்கு வந்துவிட்டு மீண்டும் காரில் ஊா் திரும்பினாராம்.
அப்போது சாலையில் திடீரென மாடு ஒன்று குறுக்கிட்டுள்ளது. மாடு மீது மோதாமல் இருக்க ஆறுமுக சரவணன் காரை திருப்பியபோது காா் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த கண்டிகைப்பேரி குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. அவ்வழியாக சென்றவா்கள் காருக்குள் இருந்த ஆறுமுகசரவணனை மீட்டனா். அவா் காயமின்றி உயிா் தப்பினாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மாநகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.