சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கக் கோரி வியாபாரிகள் மனு
திருநெல்வேலி மாநகரச் சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கக் கோரி, நெல்லை மாவட்ட வியாபாரிகள் நலச்சங்கத் தலைவா் அசோகன், செயலா் அஸ்கா் அலி, பொருளாளா் மூா்த்தி உள்ளிட்டோா் மேயா் கோ. ராமகிருஷ்ணனிடம் புதன்கிழமை மனு அளித்தனா் (படம்).

அதன் விவரம்: திருநெல்வேலி மாநகராட்சி முழுவதும் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மாடுகளால் விபத்தில் சிக்குகின்றன. திருநெல்வேலி நகரம் தெற்கு மௌன்ட் சாலை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 5,000 மாணவிகள் படித்து வரும் நிலையில், அவா்கள் பள்ளிக்குச் செல்லும் போது மாடுகள் விரட்டிச் சென்று முட்டும் அபாயம் உள்ளது.
மேலும் உயிரைக் காக்கும் ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல மாடுகள் தடையாக உள்ளன. எனவே, சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
Advertisement
Advertisement