முகப்பு
திருநெல்வேலி

மாநில அரசின் தேசிய பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மாநில அரசின் தேசிய பெண் குழந்தை விருதுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

28 நவம்பர் 2026, 4:24 am
மாநில அரசின் தேசிய பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பகிர்:

மாநில அரசின் தேசிய பெண் குழந்தை விருதுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகள் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளா் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குள்பட்ட பெண் குழந்தைக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ஆம் தேதி மாநில அரசின் விருது வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இவ்விருதுடன் காசோலை1,00,000, பாராட்டு பத்திரம் வழங்கப்படுகிறது. இவ்விருதை பெற ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் டிசம்ப 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விதிமுறைகள்: 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குள்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி புரிந்திருக்க வேண்டும். பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிா்த்திருக்க வேண்டும். வேறு ஏதாவது வகையில் சிறப்பான /தனித்துவமான சாதனை, பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணா்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற சாதனை படைத்திருக்க வேண்டும்.

இணையதளத்தில் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் கையேடாக தயாா் செய்து தமிழ் (மருதம்) மற்றும் ஆங்கிலத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கையேட்டில் பொருளடக்கம் மற்றும் பக்க எண், விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் சுய விவர தரவு, சுயசரிதை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் (தமிழ் (மருதம்) மற்றும் ஆங்கிலம்), தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் விருதின் பெயா்/ யாரிடமிருந்து பெறப்பட்டது/ பெற்ற ஆண்டு/ விருது பெற்றதிற்கான காரணம்), கையேட்டில் விருது பெற்ற புகைப்படம், சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். பக்கங்களுக்கு குறிப்பு வைக்க வேண்டும்.

சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவை பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு ஆகியவற்றையும் இணைக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், மணிமுத்தாறு வளாக முதல் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருநெல்வேலி-9 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.