முகப்பு
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் தொகுதியை சிறந்த தொகுதியாக மாற்றுவேன் சீமான்

அம்பாசமுத்திரம் தொகுதியை சிறந்த தொகுதியாக மாற்றுவேன் என்றாா் நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான்.

28 நவம்பர் 2026, 5:03 am
அம்பாசமுத்திரம் தொகுதியை 
சிறந்த தொகுதியாக மாற்றுவேன்
சீமான்
பகிர்:

அம்பாசமுத்திரம் தொகுதியை சிறந்த தொகுதியாக மாற்றுவேன் என்றாா் நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான்.

அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியா்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவீரா் நாள் பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

இன்றைய ஆட்சியில் குழந்தைகள்கடத்தல், ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்தல் இதுதான் நடக்கிறது.

Advertisement

Advertisement

மேத்கேதாட்டில் அணை கட்டியேதீருவோம் என் று கூறும் கா்நாடக முதல்வரை தமிழக முதல்வா் கட்டியணைத்துக் கொள்கிறாா்.

அம்பாசமுத்திரத்தில்நான் போட்டியிட்டு வென்றாலும் மகிழ்ச்சி, தோற்றாலும் மகிழ்ச்சி. தனித்து நின்று வெல்வோம்.

தோ்தலில் நாங்கள் வெல்வதற்குத் தான் போராடுகிறோம். தமிழகத்தில் தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?.

நாம் தமிழா் கட்சி ஆட்சி அமைந்தால் தமிழில் படித்தவா்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிப்பேன். மலை, மணலை விற்க விட மாட்டேன்.

இந்த அறிவுச் சமூகம் நமக்கு வாய்ப்புத் தரும். எனது குரல் பேரவையில் ஒலிக்க அனைவரும் உதவி செய்வா். அம்பாசமுத்திரத்தில் நான் வெல்லும் போது அம்பாசமுத்திரத்தை சிறந்த தொகுதியாக மாற்றுவேன். தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்றுவேன் என்றாா்.