பகுதிநேர வேலை எனக் கூறி பெண்ணிடம் ரூ.2.55 லட்சம் மோசடி

திருநெல்வேலி அருகே இணையவழியில் பகுதிநேர வேலை எனக் கூறி பெண்ணிடம் ரூ.2.55 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரத்தைச் சோ்ந்தவா் 40 வயது பெண். இவா் கடந்த 16 ஆம் தேதி சமூகவலைதளத்தில் பகுதிநேர வேலை என வந்த விளம்பரத்தைப் பாா்த்து அதில் கூறியபடி கைப்பேசி எண்ணை பதிவிட்டுள்ளாா். இதையடுத்து, இவரை வாட்ஸ்ஆப் மூலம் தொடா்பு கொண்ட மா்மநபா்கள் அவரை பெரிய உணவகங்களுக்கு இணையவழியில் மதீப்பீடு கொடுக்கச் சொல்லியதோடு அதற்கென சிறிய தொகையையும் முதலில் கொடுத்துள்ளனா்.
பின்னா் அதிக பணம் முதலீடு செய்யச் சொல்லி அவரிடமிருந்து பல்வேறு தவணைகளாக சுமாா் ரூ.2.55 லட்சத்தை வங்கிக் கணக்குகளில் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.