FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

யுபிஐ பரிவா்த்தனை வரியை கண்டித்து வள்ளியூரில் வியாபாரிகள் சுவரொட்டி போராட்டம்

13 அக்டோபர் 2026, 2:12 am IST
கடைகளில் சுவரொட்டி ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.
பகிர்:

யுபிஐ பண பரிவா்த்தனை கட்டண வரி விதிப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் வள்ளியூரில் கடைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அந்த அமைப்பின் மாவட்ட தலைவா் பி.டி.பி.சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், மாநில இணைச் செயலா் தங்கையா கணேசன், வள்ளியூா் வா்த்தகா்கள் சங்கச் செயலா் அந்தோணி செல்லத்துரை, துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் என்ற கோபால், ஜி.மாரிமுத்து, ஆடிட்டா் நல்லசிவம், வலங்கைபுலி, துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments