FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நூருல்இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக பகுதிகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக வேலைவாய்ப்பு முகாம் குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

 மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.  இதில் திருவனந்தபுரம், சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 25 நிறுவனங்கள் கலந்துகொண்டு இளைஞர்களை தேர்வு செய்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து 1550 இளைஞர்கள் கலந்து கொண்ட இம்முகாமில் 181 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

 ஏற்பாடுகளை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் தீ.சடையப்பவிநாயகமூர்த்தி, உதவித் திட்ட அலுவலர்கள் ஏ.முகமது உமர், எம்.ஆறுமுகம், பி.அந்தோணிசிலுவை, எம்.கலைச்செல்வி எம்.கே.பிச்சையப்பா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலுவலர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments