பாஜக பொறுப்பாளர்கள் குழித்துறையில் ஆலோசனை
பாரதிய ஜனதா கட்சியின் விளவங்கோடு, கிள்ளியூர் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் விளவங்கோடு, கிள்ளியூர் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, விளவங்கோடு தொகுதி அமைப்பாளர் கே.எஸ். முருகன் தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் ஆர்.டி. சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.கே. நாகராஜ் சிறப்புரையாற்றினார். நாடாளுமன்ற தொகுதிப் பொறுப்பாளர் வேல்பாண்டியன், கோட்ட அமைப்புச் செயலர் கிருஷ்ணன், கோட்டப் பொறுப்பாளர் சி. தர்மராஜ், மாவட்ட பொதுச் செயலர் சி.எம். சஜு, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன் மற்றும் கட்சியின் சக்திகேந்திரம், மகா சக்திகேந்திரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், மத்திய அரசின் நலத் திட்டங்களை அனைத்து மக்களிடம் கொண்டு செல்வது, தேர்தல் பணிகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.