திருப்பதிசாரம் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது
திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், அணைகள் நிரம்பியதையடுத்து, உபரி நீர் திறந்து விடப்பட்டது.
பெருஞ்சாணி அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீரால், பழையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆற்றிலிருந்து பிரிந்து திருப்பதிசாரம் வழியாக செல்லும் வீராணமங்கலம் கால்வாயிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், திருவாழ்மார்பன் கோயில் கொடிமரம் மற்றும் சுற்று பிரகாரம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.