FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

அருமனை அருகே தொடர் திருட்டு: 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை

அருமனை அருகே தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கேரள மாநிலப் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 7:35 am IST
பகிர்:

அருமனை அருகே தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கேரள மாநிலப் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
அருமனை அருகே மாங்கோடு விராலிக்கோணத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவரது வீட்டிலிருந்து அண்மையில் 4.5 பவுன் நகைகள் திருடு போயிருந்தன. மேலும், கீழ்மாங்கோடு சதீஷ் குமார் வீட்டிலிருந்து 6 கிராம் தங்க மோதிரங்கள், காரோடு நாரகத்தின் குழி என்ற இடத்தைச் சேர்ந்த ராஜு என்பவரது சைக்கிள் கடையிலிருந்து ஒரு சைக்கிள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தன. இச்சம்பவங்கள் தொடர்பாக அருமனை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். 
இந்நிலையில் இந்த சம்பவங்களில் தொடர்புடைய கேரள மாநிலம் வெள்ளறை பகுதியைச் சேர்ந்த அருண் (27),  ஆகாஷ் (20) மற்றும் கண்ணுமாமூடு பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோரை பிடித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments