பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் ஆக. 23இல் பட்டமளிப்பு விழா
நாகர்கோவில் அருகேயுள்ள பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியின் 10ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (ஆக. 23) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
நாகர்கோவில் அருகேயுள்ள பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியின் 10ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (ஆக. 23) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவுக்கு, கல்விக் குழுமத் தலைவர் பொன்.ராபர்ட்சிங் தலைமை வகிக்கிறார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், கல்லூரி ஆலோசகருமான காளியப்பன், காவல் துறை முன்னாள் ஐ.ஜி. செண்பகராமன், டாக்டர் சலீம், கல்லூரி இயக்குநர் அருள்சன் டானியல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சிறப்பு விருந்தினராக கிம்ஸ் மருத்துவமனை தலைவர் எம்.ஐ. சகதுல்லா கலந்துகொண்டு மாணவர், மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசுகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.