FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

வெள்ளப் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

குமரி மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 7:37 am IST
பகிர்:

குமரி மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க குமரி மாவட்டச் செயலர் ஆர்.ரவி வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை காரணமாக அணைகள் நிரம்பியதையடுத்து, அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் ஆறு, கால்வாய்களில் பெருக்கெடுத்து ஓடுவதால், கிராமங்களில் தண்ணீர் புகுந்து ஏராளமான வீடுகள் இடிந்துள்ளன. மேலும், மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  எனவே, அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதோடு, வீடுகள் இடிந்தவர்களுக்கு  பசுமை வீடு திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். 
மாவட்டத்தில் அறுவடை செய்யும் தருவாயில் காணப்பட்ட நெற்பயிர்கள் பறக்கைபற்று, சிவந்தபற்று ஆகிய இடங்களிலும், தோவாளை வட்டத்தில் பல்வேறு கிராமங்களிலும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.  மேலும், மழையால் தென்னை, வாழை, காய்கனி மற்றும் வேளாண், தோட்டக் கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன. எனவே, சேதமடைந்த பயிர்களை உடனடியாக கணக்கிட்டு, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சேதமடைந்த கால்வாய்,  குளம்,  ஏரிகளையும் சீரமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments