நாகர்கோவிலில் ஜவுளிக்கடையை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு
நாகர்கோவிலில் குழந்தைகளுக்கான துணிக்கடையின் பூட்டை உடைத்து, ரூ. 25 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவிலில் குழந்தைகளுக்கான துணிக்கடையின் பூட்டை உடைத்து, ரூ. 25 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் செயல்படும் குழந்தைகளுக்கான துணிக் கடையை, செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் அதன் உரிமையாளர் ஜூலியன்பீட்டர் பூட்டி விட்டு சென்றார். புதன்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டுப் போனது தெரியவந்ததாம்.
இதுகுறித்து கோட்டாறு போலீஸில் கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கடையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைவதும், அங்கிருந்த ரூ. 25 ஆயிரத்தை திருடிச் செல்வதும் பதிவாகியது தெரியவந்ததாம்.
மேலும் திருடி விட்டு வெளியே செல்லும் முன் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை திருப்பி வைத்து விட்டு சென்றதையும் போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து, சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.